கோவை : ஏழ்மை மக்கள் பயன்படும் நோக்கத்தில், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டெக்சிட்டி மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து " Eye Serve" - அனைவருக்கும் கண் மருத்துவம் என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் பார்வையின்மை நோயுற்ற வாழ்க்கைத் தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. வயதானவர்களிடையே பார்வை குறைபாடு 22% முதல் 35% வரை காணப்படுகின்றது. கண்புரை மற்றும் திருத்தப்படாத ஒளிவிலகல் பிழைகளே இந்தியாவில் பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாட்டிற்கான இரு முக்கிய காரணங்களாகின்றன. பார்வையற்ற மக்கள் தொகையில் 30% பேர் 20 வயதுக்கு முன்பே கண்பார்வை இழக்கின்றனர். இது பெரும்பாலும் குணப்படுத்தக் கூடியவை என்பது ஓர் நற்செய்தியாகும்.
பார்வையின்மைக்கு முக்கிய காரணமாக விளங்கும் கண்புரை நோயை எளிய அறுவை சிகிச்சை கொண்டு குணப்படுத்த முடியும். இருப்பினும் போதிய விழிப்புணர்வு மற்றும் பொருளாதார கட்டுப்பாட்டின் காரணத்தினாலும் பெரும்பான்மையானவர்களுக்கு உரிய கண்சிகிச்சை சென்றடைவதில்லை. இந்த நிலை தொடருமேயானால், முற்றிய நிலையில் உள்ள கண்புரை, நிரந்தர பார்வை இறப்பிற்கு வழிவகுக்கும். கண்ணீர் அழுத்தம் மற்றும் விழித்திரை போன்ற கண் நோய்களும் நிரந்தர பார்வையின்மைக்கான காரணங்களாகும்.
இதையும், பிற எண்ணற்ற கண் தொடர்புடைய நோய்களையும் குணப்படுத்தும் வகையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தொண்டு நிறுவனமான “ராஜலட்சுமி நேத்ராலயா” 2003 ஆம் ஆண்டில் சமூகத்தின் ஏழைப்பிரிவினருக்கு தரமான கண் மருத்துவத்தை இலவசமாக மற்றும் அதிகபட்ச மானிய விலையில் வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இம்மருத்துவமனை சுப்பிரமணியம் சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை என்னும் முகவரியில் அமைந்துள்ளது. இம்மருத்துவமனை திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டு வருகின்றது.
இங்கு வெளிநோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. கண்புரை மற்றும் பிற அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, கோவை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு திட்டத்தின்கீழ் அல்லது தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் “சுதர்சனம்” திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில், தன் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் சிகிச்சைகளை சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து தர மக்களும் பயன்படும் வகையில் சிறப்பாக அளித்து வருகின்றது.
ராஜலட்சுமி நேத்ராலயா கண் மருத்துவமனையின் சமூக சேவைகளை, மேலும் விரிவுபடுத்தி சமுதாயத்தின் பெரும்பாலான ஏழ்மை மக்கள் பயன்படும் நோக்கத்தில், ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டெக்சிட்டி மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து " Eye Serve" - அனைவருக்கும் கண் மருத்துவம் என்னும் திட்டத்தை ராஜலட்சுமி நேத்ராலயா கண் மருத்துவமனையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ரொட்டேரியன் ஆர் மாதவ் சந்திரன், மாவட்ட ஆளுநர், RI Dist 3201, மக்களுக்கு அளிக்க உள்ளார். உடன் ரோட்டரி கிளப் மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் பல்வேறு மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இத்திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டெக்சிட்டி மற்றும் ராஜலட்சுமி நேத்ராலயா இணைந்து, சமுதாயத்தில் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மக்களும் பயன்படும் வகையில், கண் மருத்துவத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், முகாம்கள் அமைத்தும் மக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை வழங்கவுள்ளனர். மேலும், குளுக்கோமா, விழித்திரை, ஆக்கிலோபிளாஸ்டி போன்ற பிற கண் நோய்களுக்கான மருத்துவத்தை, ராஜலட்சுமி நேத்ராலயா மருத்துவமனையில், ஏழ்மை மக்களுக்கு இலவசமாக வழங்கும் வகையிலும், அதற்குத் தேவையான அதிநவீன கருவிகளையும் வழங்குவதற்கு திட்டமிட்டு வருகின்றது.